Saturday, September 05, 2009

வேற்று மொழி.......

இன்று, நான் பிறந்த மூன்றாவது நாள்


 பட்டுத்தூளியில், படுத்துக் கொண்டு, என்னைச் சுற்றி நகரும் வித்தியாசமான இந்த புதிய உலகத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது ஈரமாய் நனைந்த அந்த தாதியை பார்த்து, என் தாய் கேட்டாள்


எப்படி இருக்கிறான் என் குழந்தை?


 மிக அருமையாய். ஆனால் இதுவரை மூன்றுமுறை பாலூட்டிவிட்டேன், ஆனல் இன்னும் தேவையாயிருக்கிறது அவனுக்கு. இதுவரை இப்படி ஒரு குழந்தையை நான் கண்டதில்லை. எனச் சொன்னாள் தாதி……


 மிகுந்த கோபத்தோடு கத்தத் தொடங்கினேன்… ..


 அம்மா….இவர்கள் சொல்வது உண்மையில்ல….. நான் படுத்திருக்கும் இந்த படுக்கை கடினமானதாக இருக்கிறது. நான்  குடித்த பால் எனக்கு ஏனோ கசக்கிறது. அதோடல்லாமல், பால் குடிக்கும் போது மார்பிலிருந்து வருகிற வீச்சமும் மூக்கை துளைத்து என்னை துன்பப்படுத்துகிறது. அதனால் தான் அழுகிறேன்.


நான் சொன்னது புரியவில்லை என் தாய்க்கு,....... தாதிக்கும் கூட……


ஏனென்றால்…. என் மொழி,…………. இங்கு பிறப்பதற்கு முன்பு நான் இருந்த இடத்தில் பேசிக்கொண்டிருந்த மொழி…… நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே பேசப்பட்ட மொழி.




 இன்று நான் பிறந்த இருபத்திஓராம் நாள்… .


நான் ஒரு கிருஸ்துவனாக ஆக்கப்பெற்றேன்.




வாழ்த்துசொன்ன பாதிரி என் தாயிடம்… .


நீ மகிழ்ச்சிகொள்ள இன்னும் ஒன்று உள்ளது மகளே.


“உன் பிள்ளை பிறப்பாலேயே கிருஸ்துவன்” என்றார்.




மிகுந்த ஆச்சரியத்தோடு அவரிடம் சொன்னேன்:




சொர்க்கத்திலிருக்கும் உங்கள் தாய் வருத்தப் படுவாளா?, நீங்கள் பிறப்பாலேயே கிரிஸ்துவனாக இல்லை என்பதற்காக என்று.




ஆனால் அந்த பாதிரிக்கும் கூட ….. என் மொழி புரியவில்லை.




 இப்பொழுது நான் ஏழு முழு நிலவுகளை கண்டிருந்தேன்


, ஒரு குறிசொல்லும் குறிகாரன் என் தாயிடம் சொன்னான்…..




“உங்கள் பிள்ளை ஒரு கல்வியாளனாகவும், மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு மிகப்பெரிய தலைவனாகவும் வருவான் என்று சொன்னான்.






நான் அழத்தொடங்கினேன்…


 .இது பொய்…..பொய்யாக குறி சொல்லுகிறான். நான் ஒரு இசைக்கலைஞனாக போகிறேன். இசைக்கலைஞனாகவே ஆவேன்.


ஆனால் இப்போதும் கூட நான் பேசுவது யாருக்கும் புரியவில்லை…….




முப்பத்திமூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டது .


என் தாயும், தாதியும், ,,,ஏன் பாதிரியும் கூட கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். ஒருநாள் ஒரு கோவிலின் வாயிலில் அந்த குறிசொல்பவனைக் கண்டேன். அவன் எப்படியோ இன்னமும் உயிரோடுதானிருந்தான்.




என்னைப்பார்த்ததும் அவன் சொன்னான்:


பார்த்தாய?, நான் சொன்னது சரியாகிவிட்டது. நீ ஒரு பெரிய இசை கலைஞனாக வருவாய் என்று பல வருடங்களுக்கு முன், உன் தாயிடம் உன்னைப் பற்றி கணித்துச் சொல்லியிருந்தேன்.


அப்பொழுது நீ ஒரு குழந்தை….. என்றான்.




ஆம்…… அவன் அப்படித்தான் சொல்லியிருப்பான் என நானும் நம்புகிறேன்……. ஏனென்றால் எனக்கே  மறந்துவிட்டது ……..நான் அப்பொழுது பேசிய .அந்த வேற்று உலகத்தின் மொழி.




Original by khalil gibran ‘s “ The other language”


தமிழாக்க முயற்சி: ஆரூரன். விசுவநாதன்

9 comments :

ஈரோடு கதிர் said...

//தமிழாக்க முயற்சி: ஆரூரன். விசுவநாதன்//

வேற்றுமொழி...

நல்லாத்தான் ஆக்கியிருக்கீங்க

வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்

க.பாலாசி said...

//அதோடல்லாமல், பால் குடிக்கும் போது மார்பிலிருந்து வருகிற வீச்சமும் மூக்கை துளைத்து என்னை துன்பப்படுத்துகிறது. அதனால் தான் அழுகிறேன்.//

இந்த வரிகளில் குழந்தையின் மொழி தெரிகிறது...நல்ல கற்பனையான வரிகள்...(உண்மையாகவும் இருக்கலாம்)

நல்ல மொழியாக்கம் அன்பரே....

மாதவராஜ் said...

கலீல் கிப்ரானின் எழுத்துக்களை அவ்வப்போது எடுத்துப் படித்துக்கொண்டே இருப்பேன். தெரிந்துகொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் எவ்வளவோ அவர் சொல்லி வைத்திருக்கிறார். இந்தக் கவிதை எனக்கு மிக பிடித்தமான க்லவிதை. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

ஆரூரன் விசுவநாதன் said...

அன்புச்சகோதரர் மாதவராஜ் அவர்களுக்கு,
உங்கள் வருகையும், பதிவும், நல்ல மகிழ்ச்சியை தருகிறது.

உங்கள் கருத்தும், விமர்சனமும், என் எழுத்துக்களை இன்னும் கூர்படுத்தும் என நம்புகிறேன்.
நன்றி

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாஜி,

விரைவில் சந்திப்போம்

அன்புடன்
ஆரூரன்

ஹேமா said...

வணக்கம் ஆரூரன்.நானும்கேள்விப்பட்டு இருக்கிறேன் குறிப்பிட்ட 3- 4 வயதிற்குள் பழைய நினைவுகள் வருமாம் என்று.உங்கள் வேற்று மொழி அருமை.நாங்கள் இந்த நாடுகளுக்கு வந்த புதிதில் பட்ட கஸ்டங்களை விடக் குறைவுதான்.

vasu balaji said...

நல்லா இருக்குங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா....

நன்றி வானம்பாடிகள்