Tuesday, September 08, 2009

உன்னிடம் மயங்குகிறேன்...........


சற்றே உந்தன் தலை சரித்து 
ஓரக்கண்னால் எனைப்பார்த்து
உதட்டைச் சுழித்து நீ திட்டும்     
ஒற்றை வார்த்தையில் தொலைந்ததடி, 
ஒடுக்க முடியா என் கோபம்........


















அடங்கமறுக்கும் என் வேகம்
ஆளுமை  எதிர்க்கும் என் தாகம்
எதிலும் வல்லவன் நானென்று
ஆர்ப்பரிக்கும் என் புத்தி-
எப்படி தொலைந்தது  
இந் நொடியில்...


 
வரட்டும் இன்று கிழித்திடுவோம்
வார்த்தையென்னும் சவுக்கடியால்
திட்டம் பலவும் நான் போட்டு
தீவிரமாக மனம் முயன்றும்
தேவை மாறிப்போனதடி 
தொலைவில் உன்னைக் கண்டவுடன்
 
உன்னை எந்தன் உடையாக்கி
சுவைமிகு மதுவை உதடிருத்தி
கிறங்கிய விழிகளில் எனைப்பார்த்து
இன்னும் என்ன வேண்டுமென்பாய்-
இன்னும் இன்னும் நீ யென்பேன்.




10 comments :

க.பாலாசி said...

//வரட்டும் இன்று கிழித்திடுவோம்
வார்த்தையென்னும் சவுக்கடியால்
திட்டம் பலவும் நான் போட்டு
தீவிரமாக மனம் முயன்றும்
தேவை மாறிப்போனதடி
தொலைவில் உன்னைக் கண்டவுடன்//

ஆகா...காதல் ரசம்...அருமை...

//உன்னை எந்தன் உடையாக்கி
சுவைமிகு மதுவை உதடிருத்தி//

ப்ச்....ஆ...........அழகு....

//கிறங்கிய விழிகளில் எனைப்பார்த்து
இன்னும் என்ன வேண்டுமென்பாய்-//

ம்ம்ம்....அப்பறம்.....

//இன்னும் இன்னும் நீ யென்பேன்.//

இதுதான வேண்டாங்கறது...இன்னொரு பாட்டில் எங்கேன்னுல்ல கேட்கணும்...

சுவைமிகு மதுவும்,
உங்கள் கவிதையெனும் அமுதும் அருகில் வைத்தால்
நான் எடுப்பது....உங்கள் கவிதையே....

வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

//ஓரக்கண்னால் எனைப்பார்த்து
உதட்டைச் சுழித்து நீ திட்டும்//

அழகோ அழகு போங்க

காதல் ரசம் வழியும் கவிதைகள்

படங்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாக வழிகிறது

//சுவைமிகு மதுவும்,
உங்கள் கவிதையெனும் அமுதும் அருகில் வைத்தால்
நான் எடுப்பது....உங்கள் கவிதையே....//

ஆரூரன் பாலாஜிக்கு கவிதை மட்டும் போதுமாம்..
அப்போ சரக்கு மிச்சம்

பழமைபேசி said...

கிறங்க வைக்கும் வரிகள்... நயமாய் இருக்கிறது... வாழ்த்துகள்!

//தொலைந்தடி//

தொலைந்ததடி

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி........
கதிர் சொன்னது போல் எனக்கு "ரெண்டு"
என் பங்கை நீங்க எடுத்துக்குங்க.....உங்க பங்கு எனக்கு....

அன்புடன்
ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்,
படங்களைப் பார்த்தபின்பு எழுதப்பட்டவை,
வரிகளுக்காக இடப்பட்ட படங்கள் அல்ல....

அதனால் கொஞ்சம் அதிகம் வழிந்துவிட்டது....

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

/தொலைந்தடி//

தொலைந்ததடி


அவ்வ்வ்..........தப்புதாங்கண்ணா....
மாத்தீட்டனுங்கண்ணா....

நன்றி
அன்புடன்
ஆரூரன்.

ஹேமா said...

காதல்-எப்படித்தான் வார்த்தைகளைப் போட்டுப் புரட்டி எடுத்து எழுதினாலும் அழகுதான்.

vasu balaji said...

ம்ம்ம். ரொம்ப அழகான கவிதை. பாராட்டுக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹேமா.//

உண்மை...உண்மை...

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

நன்றி

அன்புடன்
ஆரூரன்