Thursday, September 17, 2009

பார்ப்பணீயத்தின் புதிய தில்லாலங்கடி…..-ஒரு விளக்கம்

நண்பர் வால் பையனின் கட்டுரையும் அதைத் தொடர்ந்து வெளிவந்த விமர்சனங்களுக்கும், பதிலெழுதாமல் விட மனம் ஒப்பவில்லை. அவர் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு, எப்படிச் சொல்லவந்தார் என்பதில் மூத்த 'தலை'களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு விமர்சித்தது ஏன் என்று தெரியவில்லை. எனவே இப்படி ஒரு பதிவு....  

"பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!" 

நல்ல முன்னுரை என்பதை விட நல்ல தற்காப்புரையுடன் நண்பர் வால் எழுதியிருப்பதாக தோன்றுகிறது.

நண்பர் வாலின் இடுகை(http://valpaiyan.blogspot.com/2009/09/blog-post_16.html)
குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த தன்னுடைய நண்பர்கள், அல்லது வேண்டப்பட்டவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு முன்னுரையை எழுதியிருக்கலாம்.


எனது பதிவுகள்:

1. பார்ப்பணீயம் என்பது

"ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" 

என்பது சரியானதாக இல்லை.

சக மனிதனில் தன்னை முன்னிலைப்படுத்துக்கொள்ள , தன் கல்வியறிவினாலும், அதன்மூலம் பெற்ற அறிவுஜீவித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு படிக்காத பாமரர்களையும், நடுத்தரவர்கத்தையும், சமூகத்தின் பல்வேறு தட்டுகளில் வசித்த மக்களை அடக்கி ஆளும் முகமாக செயல்படும் பார்ப்பனர்களின் சிறப்பு குணாதிசியமே" பார்ப்பணீயம்" என்று கொள்ளலாம்.

"இதில் சேராத பார்ப்பணர்களும் உண்டு" என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

2."பார்பனீயம் வேறு, உயர் ஜாதீயம் வேறு"(டோண்டு அவ்ர்கள் கவனிக்க....)

"உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற தங்கள் வருணாசிரமக் கொள்கையை கொண்டுவந்தவர்களே இந்த பார்ப்பனர்கள் தானே. இவர்களும் தங்களுக்கு நிகராக யாரையும் உருவகப்படுத்தவில்லை. மற்றவர்கள் அனைவரையும் தங்களுக்கு கீழ்ப் பட்டவர்களாகத்தான் உருவகப் படுத்தினார்கள். அளவில் மிகப்பெரிய கூட்டமாக இருந்த மக்களை அடக்கியாள இவர்களுக்கு பணபலமும், புஜ பலமும், தேவைப்பட்டது. அதனால், தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க இவர்கள் சேர்த்துக்கொண்ட இன்னொரு கூட்டம் தான் உயர்ஜாதீயம். இவர்களைக்கூட தங்களுக்கு சமமானவர்களாக, பார்ப்பனர்கள் ஒரு போதும் இவர்கள் ஏற்கவில்லை.

இந்த நாடுமுழுவதும், காசி, அயோத்தி  உட்பட பல இடங்களில் மக்கள் அனைவரும் கோவிலின் கர்ப்பகிரகம் வரை சென்று,  சிலையைத் தொட்டு, பூசிக்கும் முறை இருக்கும் போது, இங்குள்ள உயர்ஜாதியும், நம்மோடு வெளியில் நிற்பதேன். இதைக்கேட்க ஒரு பாஜாகவும், இந்துமுன்னனியும் தயாராயில்லை.  திராவிட தறுதலைகளும் இதை ஏற்றுக்கொண்டு மஞ்சள் துண்டு போர்த்தி வெளியே நம்மோடு நிற்கின்றன.

பார்ப்பனன் உன்னை வெளியே நிறுத்தினான், அதை எதிர்க்க முடியாத நீ, அடுத்தவனை வெளியே நிறுத்தினாய்......




2.பைபிளின் மூல மொழி பற்றிய கருத்து தவறானதானாலும், ஹீப்ரூ மொழிபற்றிய "வாலின்" கருத்து சரியானதே. அழிந்து பட்ட நிலையிலிருக்கும் அதனை இப்பொழுதுதான் மீட்டுவருகின்றனர்.


அதற்கான ஆதார தொகுப்பு:

அ)"கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேபிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது"

(http://kalaiy.blogspot.com/2009/04/blog-post_12.html)



ஆ)இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது

http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_28.html


சம்ஸ்கிரதத்தை ஒரு மொழி என்று என்னால் ஏற்க முடியவில்லை. வால் பையனின் வார்த்தைகளின் படி

" மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம்" என்றால், வீட்டில் சம்ஸ்கிரதத்தில் பேசும், கடிதமெழுதும் பார்ப்பனர்களை நம்மால் காண முடிவதில்லையே.

மொழிக்கான அடிப்படையே இல்லாததால் தான் இவர்கள் அடுத்தபடியில் நிற்கும் ஹிந்திக்கு வால்பிடிக்கின்றனர். மற்றவர்களிடமிருந்து தன்னை உயர்த்திப்பிடிக்க, இவர்களின் அடுத்த இலக்கு, ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களை ஒன்றுதிரளச் செய்வதுதான்.

இந்தியன் என்ற "தேசியம்" பேசும் இவர்கள்,  என்றாவது இந்தியன் என்ற பொது இனம் என்று பேசியிருக்கிறார்களா? இந்துக்கள் என்ற பறந்துபட்ட பதத்திலாவது, பேசியிருக்கிறார்களா? இல்லையே.

பிறப்பால்,மொழியால்,கலாச்சாரத்தால், நடைமுறைப் பழக்கவழக்கத்தால், விரிவடைந்திருக்கும் மக்களை ஒன்று திரட்டவும், அவர்களின் இன தனித்துவத்தை இழக்கச்செய்யும் விதமானதாக பயன் படுத்தப்பட்டது தான் இந்த 'ஹிந்தி'ஹிந்து,ஹிந்துத்துவம், கடவுள் போன்ற கதையெல்லாம். 

ஹிந்தி பேசுபவனையெல்லாம் இவர்கள் உயர்ந்தவர்கள், தங்களுக்குச் சமமானவர்கள் என்று இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே.

மக்களை ஒன்று திரட்டுவதும், அதன்பின் அவர்களை தங்களுக்கீழ் கொண்டுவந்து, தங்கள் மேதாவித்தனத்தை வெளிக்காட்ட முனைவதும் இவர்களின் இயல்பே. 

நம்மூரில் கூட சில கதர்ச் சட்டை மேதாவிலாசங்களும், தேசியம் பேசும் அறிவுஜீவிகளும் கூட்டங்களில் பேசி முடித்தவுடன், "ஜெய் ஹிந்த்" என்பதை காண முடிகிறது. இவர்கள் ஹிந்துவை வாழ்த்துகிறார்களா? இந்தியாவை வாழ்த்துகிறார்களா?

ஹிந்தி கற்பதும் கற்காததும் அவரவர் விருப்பம். மொழியை அடிப்படையாக கொண்டு நம்மை ஒன்றினைத்து அடக்கியாள முயலும் இவர்களின் சாகச திட்டங்களும், அதன் தொடர்பாக நம் இனத்தின் தனித்துவங்களை அழிக்கமுயலும் இவர்களின் திட்டமும் தான் நமக்கு பிரச்சனை.





20 comments :

வால்பையன் said...

மிக நீண்ட விளக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே!

சாதிய ரீதியாக வேறுபாடுகளை கொண்டு வந்தது பார்பனர்கலாக இருந்தாலும், பலர் அதை கடைப்டிப்பதில்லை, அப்படியானால் தன்னை உயர்சாதி என்று நினைத்து கொள்பவனும் பார்பனனா?
அதனால் தான் ஒட்டு மொத்த பார்பனர்களை தாக்காத வண்ணம் அந்த டிஸ்கி!

**

இந்திய பாடதிட்டதில் சமஸ்கிருதம் ஒரு விருப்பபாடமாக உள்ளது! யார் வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம்! பேசலாம், எழுதலாம்!. ஆனால் சமஸ்கிருதம் தேவ பாஷை அதை இறைவனை துதிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சில இறை தும்பிக்கையாளர்கள் சொல்லியிருக்கிறார்களாம்!

நீண்ட பதிலுக்கு மீண்டுமொரு முறை நன்றி

Robin said...

//)"கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேபிய மொழியை பேசியிருக்கலாம்// - இயேசு கிறிஸ்து வாழ்ந்த பகுதியில் அதிகமாக புழக்கத்திலிருந்த மொழி அரமேய மொழி. அதனால்தான் அந்த மொழி பயன்படுத்தப்பட்டது. இதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது. கிறிஸ்தவத்தில் மொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அவரவர் தாய் மொழியிலேயே வழிபடலாம். எழுத்துக்கள் உள்ள எல்லா மொழிகளிலும் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது.

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
Robin said...

//ஹிந்தி கற்பதும் கற்காததும் அவரவர் விருப்பம். மொழியை அடிப்படையாக கொண்டு நம்மை ஒன்றினைத்து அடக்கியாள முயலும் இவர்களின் சாகச திட்டங்களும், அதன் தொடர்பாக நம் இனத்தின் தனித்துவங்களை அழிக்கமுயலும் இவர்களின் திட்டமும் தான் நமக்கு பிரச்சனை.// வழிமொழிகிறேன். அவர்களுடைய் மொழியை கற்றுக்கொள்ளவில்லை என்று ஹிந்திகாரர்களுக்கு நம் மேல் வெறுப்பும் கோபமும் உண்டு.

கோவி.கண்ணன் said...

ஒருவர் தன்னை உயர்சாதியினர் அல்லது பார்பனர் என்றுக் கூறிக் கொள்வதை எப்படி நீங்கள் பார்பனியமற்ற செயலாகப் பார்கிறீர்கள்.

தன்னைப் பார்பனர் என்றுக் கூறுபவன் மறைமுகமாக பிறரைப் பார்பனர் அல்லாதவன் அல்லது சூத்திரன் என்று குறிப்பிடுவதாகத்தானே பொருள் ?

உங்கள் வாதப்படி திருந்திய சாதி பேதம் பார்க்காத பார்பனர்கள் தங்களைப் பார்பனர்கள் என்று கூறிக் கொள்வதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள் ?

சாதி என்பது பொதுவானது தனிப்பட்ட ஒருவரின் நல்ல குணத்தை அந்த சாதியின் சர்டிபிகேட் ஆக எடுத்துக் கொள்வது சாதி வெறியின் உச்சகட்டம்

என்னைக் கேட்டால் நான் சாதி பேதம் பார்க்காத பார்பான் என்றுச் சொல்லிக் கொள்பவர் பார்பன சாதி உயர்வு என்பதை மறைமுகமாக வழியுறுத்துகிறார் என்றே பொருள்.

எனக்குத் தெரிந்த பார்பனர்களில் சிலர் தாங்கள் பார்பனர் என்றாலும் அதை வெளியில் சொல்லி பெருமைத் தேடிக் கொள்வதில்லை. அவர்களை நான் பார்பனராக நினைப்பதும் இல்லை.

எங்கோ எப்போதோ படித்தது, 'பொதுவாக திருடர்களைப் பற்றிப் பேசும் போது, திருந்திய முன்னால் திருடர்கள் ஏன் வருத்தப்பட வேண்டும் ? திருந்தியவர்களும் வருத்தப்படுகிறார்கள் அதனால் இன்னும் திருடிக் கொண்டு இருப்பவர்களை அல்லது இனிமேல் திருடர்களை திருடர்கள் என்று சொல்லாதீர்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?

என் சாதியில் எல்லோரும் கொள்ளை அடிப்பவர்களாக இருக்கிறார்கள், இன்னும் அடிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள், அதில் நான் ஒருவன் மட்டும் திருந்தி வள்ளல் ஆகி விட்ட்டால் என் சாதியைச் சேர்ந்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது என்னைப் போன்ற வள்ளல்கள் நிறைந்த சாதின்னு பட்டம் கொடுப்பிங்களா ? அல்லது என் பொருட்டு அந்த சாதியின் குறைகளைப் பேசாமலேயே இருப்பீர்களா ?

கபிலன் said...

"பார்ப்பணீயம் என்பது"

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஒரு வகுப்பில் முதன்மையான மாணவனும், வகுப்பின் லீடரின் குணங்கள் தான் பார்ப்பனீயம் என்கிறீர்கள். நல்ல விளக்கம் : )

பார்பனீயம் வேறு, உயர் ஜாதீயம் வேறு
ஹாஹா...இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா....பாரில் பனி பொழுவது தான் "பார் பனி"யம் நு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆரிய மாயை மாதிரி, திராவிட மாயை தான் இந்த பார்ப்பனீயம். இதற்கு விளக்கம் சொல்ல் முடியாது என்பது என் கருத்து.

"ஹிந்தி கற்பதும் கற்காததும் அவரவர் விருப்பம். மொழியை அடிப்படையாக கொண்டு நம்மை ஒன்றினைத்து அடக்கியாள முயலும் இவர்களின் சாகச திட்டங்களும், அதன் தொடர்பாக நம் இனத்தின் தனித்துவங்களை அழிக்கமுயலும் இவர்களின் திட்டமும் தான் நமக்கு பிரச்சனை."

தமிழை வாழ வையுங்கள், தமிழனை அம்மணமாக சுடுவதை வேடிக்கைப் பாருங்கள் - திராவிட தத்துவம். ஹிந்தி கற்கமாட்டேன் என்கிற உறுதியில் ஒரு 2 % தமிழனுக்கும் காட்டினால் திராவிட சிங்கங்களை பாராட்டலாம்!

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்ம் நடத்துங்க பாஸ்...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராபின்

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//வால் பையன்//

"உயர்சாதீயம் என்னும் தனிச்சொல்லே இருக்கும்போது ஏன் பார்ப்பனீயம் என எழுத வேண்டும்?"
என்ற நண்பர் டோண்டுவிற்காக எழுதப்பட்டது.

நன்றி
அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//கதிர்//

வாங்க கதிர்

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//கபிலன்//

நண்பர் கபிலன் அவர்களுக்கு,

உயர்ஜாதி இந்துக்கள் என்று சொல்லித்திரியும் கும்பல் தான் இங்கே, ஜாதீய பாகுபாடுகளை முன்னிறுத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான பிரச்சனைகளில் பார்ப்பனர்களின் நேரடி தலையீட்டை இதுவரை கண்டதில்லை. ஆனால் அவர்களின் தூண்டுதலினாலேயே நடைபெறுகிறது.

இதுவரையில் வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் உயர்ஜாதி இந்துக்களின் மீதே அதிகம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பனர்களுக்கெதிராக இந்த சட்டம் அதிகம் பாய்ந்ததாக தகவல் இல்லை. அதற்காக பார்ப்பனீயம் சரி என்று சொல்ல வரவில்லை.

தாழ்த்தப்பட்ட, அரிசன மக்களை கொடுமையாகத் தாக்கி, அவர்தம் குடும்பத்தாரை மானபங்கபடுத்துவது, குடிசைகளை எரித்து கொழுத்துவதும், பொதுக் கிணறுகளை பயன்படுத்துவதை தடை செய்ததும், இரட்டை தம்ளர் முறையை கொண்டு வந்ததும், உயர்ஜாதி இந்துக்களே.

இங்கு நாம் பேசுவது நண்பர் வாலின் கட்டுரை குறித்த விளக்கம் மட்டுமே.

திராவிடச் சிங்கங்களின் கொள்கையை பொருத்தவரை உங்கள் நிலைதான் என் நிலையும்

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

கோவி.கண்ணன்.

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

உங்கள் கருத்திலிருந்து நான் எங்கும் மாறிச் சொல்லவில்லை. வால்பையனின் வாதத்திற்கும் அதைத் தொடர்ந்த விமர்சனுங்களுக்குமான பின்னூட்டமே இது

நன்றி
அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

ம்ம்ம்ம்.....பெரிய மனுஷங்கல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க....நான் இப்படி ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன்...

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க பாலாஜி.....

இப்படியெல்லாம் சொல்லிட்டு தப்பிக்கமுடியாது.

எப்ப வந்தீங்க?

அன்புடன்
ஆரூரன்

Thamizhan said...

DR T M Nayar said
"Sincere servant
Tyrant master and
Cutthroat colleague" மேலும்
புலி தன் கோடுகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்.சமயம் வரும் போது காட்டிவிடுவான் என்றார்.
பெரியார் காந்தி உரியாடலிலே காந்தியார் கேட்கிறார்,அப்போ நீங்க நல்ல பார்ப்பனரே கிடையாது என்கிறீர்களா என்று.
பெரியார் சொகிறார் என் கண்கலுக்குத் தெரியவில்லையே என்று.
காந்தி சொல்கிறார்,எனக்குத் தெரிந்து கோபாலகிருஷ்ண கோகலே இருக்கிறார் என்று.
பெரியார் சொல்கிறார்,நீங்க பெரிய மகாத்மா,உங்க க்ண்ணுக்கே ஒருத்தர் தானே தெரிகிறார் என்று.
நம் அனைவர்க்கும் பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன தான் பீயர் குடித்தாலும்,மட்டன் கோழி சாப்பிட்டாலும் பார்ப்பனர்களாகத்தானே இருக்கிறார்கள்.
பெரியார் அவருடைய அருமை நண்பர் ஆச்சாரியாரைப் பற்றி சொன்னார்.
அவர் இறந்த் அடுத்த நாள் நான் சாகலாம்,ஆனால் நான் இறந்து ஒரு நாள் கூட அவர் வாழக்கூடாது.சூழ்ச்சி செய்து விடுவார் என்று.
மற்ற தமிழர்கள் சாதி பற்றிப் பார்ப்பனர்களாக உரர் சாதித் திமிருடன் ன்அடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்க வேண்டும். ஆனால் அடிப்படை பார்ப்பனீயம் என்பதை மறைக்கவோ,மறக்கவோ,மறுக்கவோ முடியாது.

Thamizhan said...

DR T M Nayar said
"Sincere servant
Tyrant master and
Cutthroat colleague" மேலும்
புலி தன் கோடுகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்.சமயம் வரும் போது காட்டிவிடுவான் என்றார்.
பெரியார் காந்தி உரையாடலிலே காந்தியார் கேட்கிறார்,அப்போ நீங்க நல்ல பார்ப்பனரே கிடையாது என்கிறீர்களா என்று.
பெரியார் சொல்கிறார் என் கண்களுக்குத் தெரியவில்லையே என்று.
காந்தி சொல்கிறார்,எனக்குத் தெரிந்து கோபாலகிருஷ்ண கோகலே இருக்கிறார் என்று.
பெரியார் சொல்கிறார்,நீங்க பெரிய மகாத்மா,உங்க க்ண்ணுக்கே ஒருத்தர் தானே தெரிகிறார் என்று.
நம் அனைவர்க்கும் பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன தான் பீயர் குடித்தாலும்,மட்டன் கோழி சாப்பிட்டாலும் பார்ப்பனர்களாகத்தானே இருக்கிறார்கள்.அவர்கள் க்ஆலத்திற்கேற்ப உடனே மாறி நடிக்கிறார்கள்,அவ்வளவுதான்.
உடலால் மாறிய பார்ப்பனர்கள்தான் மிகுதி,உள்ளத்தால் மாறியவர்கள் அரிதே.
பெரியார் அவருடைய அருமை நண்பர் ஆச்சாரியாரைப் பற்றி சொன்னார்.
அவர் இறந்த் அடுத்த நாள் நான் சாகலாம்,ஆனால் நான் இறந்து ஒரு நாள் கூட அவர் வாழக்கூடாது.சூழ்ச்சி செய்து விடுவார் என்று.
மற்ற தமிழர்கள் சாதி பற்றிப் பார்ப்பனர்களாக உயர் சாதித் திமிருடன் நடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்க வேண்டும். ஆனால் அடிப்படை பார்ப்பனீயம் என்பதை மறைக்கவோ,மறக்கவோ,மறுக்கவோ முடியாது.
September 17, 2009 9:07 PM

Post a Comment

ஆரூரன் விசுவநாதன் said...

உரத்த குரல்....

உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடா? அல்லது படித்த எழுத்துக்களின் வெளிப்பாடா? என்று தெரியவில்லை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

சுரேஷ்குமார் said...

//நம் அனைவர்க்கும் பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன தான் பீயர் குடித்தாலும்,மட்டன் கோழி சாப்பிட்டாலும் பார்ப்பனர்களாகத்தானே இருக்கிறார்கள்
//
நீங்கள் சொல்லும் குணம் படி இருந்தால் அவர் நண்பராக இருக்கமுடியாது.எனக்கும் பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள் எவரும் அப்படி இருந்ததில்லை.இப்ப அவர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள்.நாம் தான் இன்றும் பகுத்தறிவு என்பது பார்ப்பனர் எதிர்ப்பு என்று இருக்கிறோம்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாருங்கள் சுரேஷ்...

பார்ப்பனர் என்ற குறிப்பிட்ட சாதியின் தண்மை, பார்ப்பணியமா? அல்லது ஒருசாராரை தன் அறிவால், அவர்களின் படிப்பறிவிண்மையையும், இயலாமையும், அறியாமையும் பயன்படுத்தி அடக்கி ஆள நினனப்பதே பார்ப்பணீயமா? என்ற சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது.


அந்த வகையில் பார்த்தால், எல்லா, திராவிட கட்சிகளுமே பார்ப்பணியத்தை பின்பற்றுகின்றன என்றுதான் சொல்லுவேன்.

நன்றி
அன்புடன்
ஆரூரன்

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் அங்கே ரவுசு கட்டி ஆடுவதில், பத்தோடு பதினொன்றாகப் போய்விடக்கூடாதே என்று தனிப்பதிவாகப் போட்டிருக்கிறீர்கள் போல!

அங்கே, அவர் தான் என்ன தெளிவாக நிறுவினார்?
இங்கே, நீங்கள் தான் குழம்பாமல் என்ன சொல்லமுயற்சித்தீர்கள்?