Wednesday, September 23, 2009

பாயாசம், அப்பளம், வடை….


 மதியம் 2 மணி,  

அலுவலகத்திலிருந்து திரும்பி, மதிய உணவை ஒரு கை பார்த்து,  (பொதுவாகவே சாப்பிட, சாப்பிட தூங்க ஆரம்பிப்பவன்)  உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு ல்ல…….. 

வீட்டிலிருக்கும்  இரண்டு வாண்டுகளிடமிருந்து எப்படி தப்பிப்பதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது  தம்பியிடமிருந்து போன். அவன் வீட்டிற்கு வரச் சொல்லி

. சரி விதியார விட்டதுன்னு கிளம்பி போகும் போது,திடீரென்று ஒரு ஞாபகம், அன்று காலை, நா.கணேசன் அய்யா “ஈரோட்டில் பாரதி” என்ற இடுகையை படித்தேன்.  அதில்  பாரதி கடைசியாக பேசிய கூட்டம் பற்றி எழுதியிருந்தார்.

சரி, தம்பி வீட்டுக்கு பக்கத்தில் தான் அவர் குறிப்பிட்டுருந்த அந்த வாசக சாலை இருந்தது.  குடும்பத்தை தம்பி வீட்டில் செட்டில் செய்து விட்டு , பாரதி கடைசியாக பேசிய அந்த வாசகர் சாலைக்கு சென்றேன்.

நான் பள்ளியில் படித்த நாட்களில் அது இடிந்து சிதிலமாகி, பாழடைந்து கிடந்த அந்த கட்டிடம் முன்னாள் ஆட்சியர் முனைவர். உதயசந்திரன் முயற்சியால் புதுப் பொழிவுடன் காணப்பட்டது.

வெளியில் ரோட்டிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்த போது, 

உள்ளிருந்து வந்த ஒரு பெண்மனி, என்னை அழைத்து எதற்காக படமெடுக்கிறீர்கள்? என்றார்.    

காலையிலிருந்து நடந்ததைச் சொன்னவுடன், அருகிலிருந்த ஒருவரை அழைத்து இவருக்கு சுற்றிக்காட்டுங்கள். என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.  

 உடன் வந்தவரும் எல்லா அறைகளையும் சுற்றிக்காட்டிவிட்டு படங்கள் எடுக்க உதவியும் செய்தது மகிழ்சியாக இருந்தது.

நான் அவரோடு பேசிக்கொண்டிருந்த போது இந்த புகைப்படங்களை பிளாக்கில் இடுப்போவதாக சொன்ன போது அருகிலிருந்த

ஒரு திருவாளர் பொதுஜனம் மெதுவாகக் கேட்டார்: ஏன் சார்  ஏம் போட்டாவும் வரும்ல........எந்த பேப்பர் சார் நீங்க...... கொஞ்சம் பார்த்து கலர்ல போடுங்க சார்......நானே கொஞ்சம் கருப்பு..........
                                 
                                 ----------------------------------




நேற்றுமாலை பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக என் இளைய மகன் ..வயது-5

அப்பு...பப்பு…………..அப்பு.பப்பு……….

(அன்பு அதிகமானால் அல்லது என்னால் ஏதும் ஆகவேண்டியிருந்தால் அவன் இப்படி அழைப்பது வழக்கம்.)


என்னப்பா?

ஒரு முக்கியமான விசயம…………….

ம்

அம்மாகிட்ட சொல்லக்கூடாது……….


சரி சொல்லு……


மெதுவா கிட்ட வந்து……….குடும்பக் கட்டுப்பாடுன்னா என்னப்பா?

இல்லப்பா…….அதுவந்து……..வந்து…………
(பத்தாங்கிளாஸ் பரிட்சையில கூட நான் அப்படி முழிச்சதில்ல…)…

இடையில் பெரியவன்(வயது:8) டேய்..இதெல்லாம் அப்பாகிட்ட  கேக்கக்கூடாதுன்னு சொன்னன்ல..)


சொல்லுங்க.......அப்பு....பப்பு................



இல்லப்பா……அதுவந்து………..ஊருல ஏற்கனேவே மனுசங்க அதிகமாக இருக்கிறாங்க, எல்லாத்துக்கும், குடி தண்ணீர், போக்குவரத்து, பள்ளிக்கூடம், இதயெல்லாம் குடுக்கமுடியாதுல்ல


அதனால…….

அதனால, அரசாங்கம்,   இனிமே குடும்பத்த கட்டுப்பாட்டோட வச்சுக்குங்க……..அதிகமா குழந்தைகளை பெத்துக்காதீங்கன்னு சொல்லுதுப்பா..

இதயேம்பா நம்மகிட்ட சொல்லுறாங்க……சாமிகிட்டயில்ல சொல்லோனும்……..

எது………….சாமிகிட்டயா?

ஆமாப்பா……அவருதான நம்மளயெல்லாம் படச்சாரு?

அய்யோ…….சாமி…….இத யாருகிட்ட போய் சொல்லுவேன்……..

கருமாந்தரம் புடிச்ச பயலுக, டீ.வி ல  இந்த  விளம்பரத்த  போட்டு என்ன கொலைகாரனாக்கப் போறாங்க……இவனுங்க இன்னும் என்னென்ன கேப்பானுங்களோ..

                                   ---------------------------------



நாமக்கல்லில் உறவினர் இல்லத் திருமணம்.   வீட்டில் அம்மா,மனைவி, குழந்தைகள் அனைவரும் முதல்நாளே சென்று விட்டிருந்தனர்.  காலையில் எழுந்து குளித்து, 7 மணியளவில் பேருந்தைப் பிடித்தேன்.  ஈரோட்டிலிருந்து நாமக்கல்,திருச்சி வழியாக தஞ்சை செல்லும் பஸ் அது. பஸ்ஸின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தன.  ஓட்டுனருக்கு பின் இருக்கையில் ஒரு காலியிடமும், அதன் எதிர்புறம் ஒரு இரண்டும்  மட்டுமே காலியாக இருந்தது.

 காலியாக இருந்த இரண்டிடத்தில் அமரபோகும் போது வந்த, ஒரு இளவட்ட  தள்ளுநர்  என்னிடம்  :”சார், அதுல ஆள் வராங்க,  சீட் போட்டிருக்கு” என்றார். சரி என்று ஓட்டுனரின் பின் இருக்கையில் அமர்ந்தேன்.


பஸ் ஸ்டேண்டிலிருந்து  கிளம்பிய உடன், கண்டக்டர்  செல்லுக்கு ஒரு மிஸ்டு கால்.  அவரும் மீண்டும் அந்த மிஸ்டு கால கூப்பிட்டு, 


 வந்தாச்சாட?....
……………………..

பஸ் ஸ்டேண்டுல இருந்து கிளம்பிட்டோம்.. நம்ம வண்டிய பார்த்தா கை காட்டு,..என்ன……. டிரைவருக்கு தெரியாது.


ஒ . கே……வா. ன்னு சொல்லிட்டு ,


டிரைவர் கிட்ட போய்

எங்கயும் நிறுத்த வேண்டாம் நேராப் போயிடலாம்

டிரைவர்: பள்ளிபாளையத்தில டைமர் கிட்ட கையெழுத்து?

கண்டக்டர்:   வாங்கிக்கலாம்,.வாங்கிக்கலாம்………

டிரைவர்:அப்புறம்.

வழியில நம்மாளு   ஹவுசிங் போர்டுகிட்ட நின்னு கை காமிப்பாஅப்புடியே நிறுத்தி ஏத்திக்குங்க……
(அடங்கொய்யாலே……..அதுக்குத்தான் ரெண்டு சீட் ப்ளாக் பண்ணிருக்கானா.)



இதற்கிடையில் காவிரி ஆற்றின் பாலத்திற்கு அருகில் வரும் போது அவரின்  பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் கோளாரு ஏற்பட   தடுமாறிப்போனார். பள்ளிபாளையம் டிப்போ முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மெசின் மாற்றி வேறு ஒன்றை எடுத்துவந்தார்.  அதற்குள் 15 நிமிடம் காலி. பஸ்ஸிலிருந்த பயணிகள் கொதித்திழுந்து லேட்டாகி விட்டதென்று சத்தம் போட்டனர்.  இடையில் இவர் செல்போன் வேறு விடாது அடிக்கத் தொடங்கியது.


போனை எடுத்து……


வைடா…….வைடா.வந்தர்றேன்……ஒரு சின்ன பிரச்சனை……

…………….

வந்தர்ரேன்……வந்தர்ரேன்……..ஒரு சின்ன பிரச்சனைதான், சரியாயிடுச்சு……வந்தர்றேன்.


போனை கட் பண்ண,   மீண்டும் அடிக்கிறது..


போனை எடுத்து..


ஹாலோ..
………………..

ஒன்னுமில்ல..வந்து சொல்லறன்..

…………….

பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல……சின்ன பிரச்சனைதான்…………

…………………

அதற்குள் பயணிகள் அனைவரும் சத்தம் போட.போனை கட் செய்துவிட்டு.


டிரைவரிடம்.அண்ணே.கொஞ்சம் நிறுத்தாம ஓட்டுங்க…… லேட்டாயிருச்சு..


டிரைவர்: ஏன் உன் ஆளு வெயிட் பண்ணாதாம?.... வேற வண்டில போகச் சொல்லு.


இவர்: என்னண்ணே,,, கோச்சுக்கிறீங்க…….பாஸஞ்சர்ஸ் கத்தராங்கல்ல…….



டிக்கட் கொடுக்கத்தொடங்கிய அவரின் பாதிகவனம், டிக்கட் கொடுப்பதில், பாதிக்கவனம் வழியில் டிரைவர் வண்டியை நிறுத்தி தன் ஆளை ஏற்றாமல் விட்டுவிடுவாரோ? என்பதில்.


10ரூபாய் கொடுத்து 7ரூபாய் டிக்கெட் வாங்கியவருக்கு 43ரூபாய் மீதம் கொடுத்தார். 50ரூ கொடுத்து 7 ரூ டிக்கட் வாங்கியவருக்கு 3ரூ மீதி கொடுத்தார். எப்படித்தான் கணக்கு முடித்தாரோ..

5 கி.மீ பயணத்திற்குள் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்திருந்தார்.



ஒரு சிறு சந்திப்பில்,  ஒரு இளம் பெண் இடுப்பில் ஒரு குழந்தையுடன், பஸ்ஸை நிறுத்துமாறு,  கையைக் காட்டினார்.  டிரைவர் வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்துப்போகும்போது……


கண்டக்டர்:
அண்ணாஅண்ணா…….அதில்லங்கண்ணா..போலாங்கண்ணா……நம்மாளு இன்னும் கொஞ்சம் கலரா இருப்பாண்ணா……இது கைல கொழந்த வேற…….இதில்லண்ணா

 (வண்டியின் முன்பகுதியிலிருந்த அனைவருக்கும் வரப்போகும் பெண்ணைப் பார்க்கும் ஆர்வம் கூடத் தொடங்கியது..)



டிரைவர்: 
டேய்……நாசமாப்போறவனே…….நீ வந்து வண்டியோட்றா……இழவு டிக்கட்ட, நான் குடுத்துக்கறன்………


 கண்டக்டர்:
 இல்லைங்கண்ணா…….கோவிச்சுக்காதீங்கண்ணா……சாரிங்கண்ணா…….



ஒருவழியா ஒரு பஸ் நிறுத்ததிலிருந்து ஒரு பெண் கை காட்ட……வண்டியை நிறுத்தி சிலரை ஏற்றிக்கொள்கிறது வண்டி.


வண்டியிலேறிய இரு வயதான பெண்கள் அந்த காலியான சீட்டில் உட்கார……தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் நிற்க வேண்டியதாகியது.


கண்டக்டருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,  டிரைவருக்கோ பலமான சிரிப்பு..


வயதான அந்த இரு பெண்களிடமும், பேசி சரிகட்டி, ஒருவரை பின்னாலிருந்த தன் நடத்துனர் இருக்கைக்கு அனுப்பிவிட்டு, டிரைவருக்கு எதிரிலிருந்த ஒற்றை சீட்டிலிருந்த பெண்மனியை கெஞ்சி, பின்னிருக்கைக்கு அனுப்பிவிட்டு, 

என்ஜின் மீது அவர் அமர்ந்து, ஒற்றைக் காலியிடத்தில் அந்த பெண்ணை அமரச் சொன்னபோது………


பஸ் திருச்செங்கோடு அடைந்திருந்தது.........

கண்டக்டர் கெஞ்சிய விழிகளுடன்............இல்லடா......இன்னிக்கு நேரமே.....சரியில்லை.....சாரிடா..........


அந்தப்பெண்..:.......இதுக்கொன்னும் கொறச்சலில்லை........தூ......நீயெல்லாம் ஒரு கண்டக்டர்?    என்ற கோபப்பார்வை வீச  

டிரைவர் ...:............இதுக்குத்தான இத்தன அளப்பறையும் என்று ஏளனப்பார்வை வீச




எனக்கு மட்டும் ஏனோ அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.........
.நானும் இப்படித்தான் ..........ஒரு காலத்தில்..........





அவளின் பார்வை வீச்சிற்காய் காத்திருந்திருக்கின்றேன்........
வீச்சின் வேகம் நிறைதலால் 
பலமுறை காயப்பட்டிருக்கிறேன்..........ஆனாலும்...........
 .காத்திருந்திருக்கின்றேன்...........




மனமெங்கும் 
நிறைகின்ற
வலியைத், தின்கிறது-காமம்.
தீர்ந்தபின்

மீண்டும் வலியைத் தேடுகிறது


காதலென்ற பெயரில்...........




அன்புடன்
ஆரூரன்



















20 comments :

ஈரோடு கதிர் said...

பாயாசம், அப்பளம், வடை….

எல்லாம் உங்க சாபத்தோட பவர்தான அது!

இத்தன போட்டோ எடுக்கிறீங்களே.. அந்த கண்டக்டரையும், அவரோட பிகரையும் ஒரு போட்டோ பிடிச்சிருக்லாமில்ல

Unknown said...

//.. .குடும்பக் கட்டுப்பாடுன்னா என்னப்பா? ..//

சின்ன பையன் கேட்டா நீங்கதான் தெளிவா சொல்லணும், சாமியெல்லாம் கொடுக்கதுடா செல்லம், எல்லாம் ஆசாமியோட வேலதான்னு..

ஈரோடு - நாமக்கல் : ஹா.. ஹா..

க.பாலாசி said...

அந்த பாரதி வாசகச் சாலையின் முகவரி குறிப்பிடவில்லையே...குறிப்பிட்டால் நாங்களும் பார்ப்போம்...பிறகு அங்கு எடுத்த படங்களை இங்கே இடுகையிடவில்லை...

உங்கள் மகன் உங்களிடம் கேட்ட கேள்வி சரிதான். அவருக்கு அந்த விடயத்தை தெளிவுபடுத்தவேண்டியதும் உங்கள் கடமைதானே...ஏனென்றால் பாலியல் கல்வியை பள்ளியிலேயே இடைபுகுத்த விரும்பும் நாம் இதைபோன்ற குழந்தைகளின் சந்தேகங்களை தீர்த்துவைப்பதில் தயக்கம் காட்டுவது சரிதானா? (அவருக்கு புரிகிறதோ இல்லையோ?)

நானும் சில பேருந்துகளில் இதுபோல் பார்த்திருக்கிறேன். ஆயினும் தாங்கள் சென்ற பேருந்தில் கொஞ்சம் அதிகம்தான். என்ன செய்வது அவரின் நிலைமை அவருக்குதான் தெரியும்....

ஆமாம் அதென்ன பாயாசம், அபபளம், வடை....

மணிஜி said...

ரசித்தேன் நண்பரே

மணிஜி said...

ஆசை..தோசை.....

vasu balaji said...

பொது சனத்துக்கு பயந்து புகைப்படமே போடுறதில்லைன்னு விட்டீங்களா. :)). இந்த வாண்டுப் பசங்க இப்புடி சங்கடத்துல மாட்றதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பானுவளோ. இதுங்களுக்கு புரியாதேன்னு ஏதாவது சொல்லப் போனா போங்கப்பா. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலன்னு தகப்பன் சாமியாய்டுவாங்க. கவிதை நல்லாருக்கு ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

கதிர்......

//இத்தன போட்டோ எடுக்கிறீங்களே.. அந்த கண்டக்டரையும், அவரோட பிகரையும் ஒரு போட்டோ பிடிச்சிருக்லாமில்ல//

எடுத்திருக்கலாம்.....ஆனா அந்த பிகரோட புருசன் அந்த படத்த பார்த்திட்டா........

நன்றி கதிர்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி....நண்பர் பட்டிக்காட்டான்.....

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி.....


3 வேறு பட்ட சுவைகள், அதான்......


கருங்கல்பாளையம், காந்தி சிலைக்கு நேர் எதிர் ரோட்டில் 200மீட்டர் தூரத்தில் உள்ளது.

நன்றி பாலாஜி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி....வானம்பாடிகள்

புகைப்படங்களை இணைக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி
அன்புடன்
ஆரூரன்

Anonymous said...

ஈரோடு - நாமக்கல் பயணம் சூப்பருங்க. நல்லா சிரிச்சேன். எல்லாம் வயசுக்கோளாற்.

பழமைபேசி said...

நல்ல பயணம்....

//போதுஜனம் //

போத்துசனம் u mean?

ஆரூரன் விசுவநாதன் said...

சின்ன அம்மிணி:

//வயசுக்கோளாற்.//

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

பழமை பேசி.....

அவ்வ்வ்வ்........வந்திட்டீங்களா.................


திருத்திட்டேன்......

நன்றி
அன்புடன்
ஆரூரன்

நாடோடி இலக்கியன் said...

ரசித்து படித்தேன்,

நகைச்சுவை உணர்வோடு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது உங்கள் எழுத்து நடை.

அருமை,அதுவும் அந்த கு.க சத்தமாய் சிரித்துவிட்டேன்.

பா.ராஜாராம் said...

நல்லா வந்திருக்கு விஸ்வா!ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கேன்.நேரம் வாய்க்கிறபோது தளம் வாங்களேன்.நன்றி!

ஆரூரன் விசுவநாதன் said...

நாடோடி இலக்கியன்....

நன்றி நண்பரே

ஆரூரன் விசுவநாதன் said...

பா.ரா....

உங்களை தொடர்ந்து பின் தொடர்கிறேன். உங்கள் எழுத்தின் மீது ஆழமான காதலுண்டு.



நன்றி
அன்புடன்
ஆரூரன்

ஹேமா said...

நகைச்சுவையோடு பாயாசம் அப்பளம் வடை.சுவைத்தேன்.பாயாசத்தோடு அப்பளம் எனக்குப் பிடிக்கும்.குட்டிக்கவிதை நல்லாயிருக்கு.

காதல் - சிலுவை
காதல் - வலி.
என்றாலும் காத்திருப்பு
சுகமானதுதான்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா.....



காதல்
வலி
காத்திருப்பு
சிலுவை
சுகம்......
ஆயினும் சிலுவையில் நான்.....


அன்புடன்
ஆரூரன்

அடடே.....அருமை.....