Friday, September 25, 2009

அப்படியே தந்துவிடு..........

அன்பிற்கினிய நண்பர் பா.ரா.
 http://karuvelanizhal.blogspot.com
ஒரு தேவதையை எனக்கு அனுப்பியிருக்கிறார்.






"வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்த போது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்".

 என்ற கவிஞர் மு.மேத்தாவின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

 வரமாட்டாள், வந்தாலும் ஏதும் தரமாட்டாள், நம்பாதே, என்று சமீபத்தில் தான் ஒரு தோழிக்கு பின்னூட்டம் எழுதினேன்.  ஆனால் இவ்வளவு விரைவாக என்னிடமும் வருவாள் என்று எண்ணியிருக்கவில்லை.




பார்த்தாயா?......தேவதையே.......

எத்தனை ஆசைகள் இந்த மனிதர்களுக்கு?
வலைப்பூ நண்பர்கள் ஒவ்வொருவரும் இதுவரை கேட்டதை பார்க்கும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.


இழந்த நிமிடங்களை, இழந்தநாட்களை, இழந்த மனிதர்களை, இழந்த நட்புகளை, என்னும் எத்தனையெத்தனையோ....இழந்தவைகளை எல்லாம் கேட்டவர்கள் ஒருபுறமென்றால்............

இதுவரை காணாததை, கிடைக்காததை, ஏன் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதவைகளைக் கூட,  கேட்டவர்கள்...............  மறுபுறம்.


ங்கிருந்தோ  வரும் இந்த பாடல் வரிகளில் மூழ்குகின்றேன்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே  நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி
என்ற வரம் கொடு பூமியில் சில மாறுதல் தனை வர விடு (புத்தம் புது)

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்

சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்

தேசத்தின் எல்லை கோடுகள்
அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே
வந்து வாழட்டும்


இப்படிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  என்னதான்  செய்வாய் நீ.....


பொன்னொத்த நிலவே நீ-நின்

கள்ளொத்த கனிவாயால்

வரமொன்று தர விழைந்தால்...

விரைந்திங்கே வந்துவிடு.


.
பாசம்நிறை நண்பரெல்லாம்
வாசமிகு வலைப்பூவில்
வரிசையாய் கேட்டுவிட்டார்....


அவர்- ஆசைப்பட்ட அத்தனையும்
அப்படியே தந்துவிடு......அப்படியே தந்துவிடு.


.






















24 comments :

vasu balaji said...

ச்சும்மா:
/தேவதை வருதோ இல்லையோ பழமை வருவாரு. வரம் கிடைக்குதோ இல்லையோ குட்டு வாங்காம இருக்கணும்னா ’வரமொன்று தர விழைந்தால்’ மாத்துங்க./
நிஜம்மா:
சத்தான முத்தான வரங்கள் ஆரூரன்.

பழமைபேசி said...

நித்திரையால இருக்கேன்...எந்திரிச்சவுட்டு வந்து படிக்கேனுங்க அண்ணாத்தே!!

ஆரூரன் விசுவநாதன் said...

அய்யோ....சாமி......மறந்து போட்டனுங்....

எத்தனவாட்டி குட்டு வாங்குனாலும், மறந்து போயிருதுங்...ணா. நொம்ப சந்தோசங்....ணா.
இன்னக்கி தலை தப்பிச்சிருச்சிங்......


நெசமாலுமே....நல்லாருக்குதுங்களாங்......ண்ணா...


நன்றிங்.....ண்ணா

ஆரூரன் விசுவநாதன் said...

பழமை பேசி//

நித்திரையால இருக்கேன்...எந்திரிச்சவுட்டு வந்து படிக்கேனுங்க அண்ணாத்தே!!


அதான் திருத்திபுட்டமுள்ள...... இனி எப்பவேணா வரலாங்.....ணா.

ஹேமா said...

ஆரூரன் தேவதை உங்ககிட்டயும் வந்திட்டாவா!என்ன வேணுமோ எல்லாம் கேட்டுக்கோங்க.நான் கேட்டதெலாம் தரேன்ன்னு சொல்லிட்டு போயிருக்கா.நானும் பாத்திட்டு இருக்கேன்.
வருவான்னு.

vasu balaji said...

ம்கும். இதென்னாவாம். பாசம்நிறை நண்பரேல்லாம். நண்பரெல்லாம். இஃகி. நிசம்மா நல்லா இருக்குங்.

ஈரோடு கதிர் said...

ஏனுங்... ஆரூரன்

தேவதை வந்த சந்தோசத்த விட
மாப்புவ பார்த்துதான்
பயப்படுவீங்களாட்ட இருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹேமா//


த்தோ....பார்ரா....

நாங்கல்லாம் யாரு......சொல்லீட்டம்ல......

மொத அல்லாரும் கேட்டத குடு, இல்லாங்காட்டியும் அப்பீட்டு ன்னு

அனுப்பீட்டமுல்ல........

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//


பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...

இதில்....நீங்கள்......எந்த வகை......
என்...பது.....உங்களுக்கே தெரியும்......


திருத்தீட்டனுங்....ணா. தூங்கப்போன மச்சான் வாரதுக்குள்ள வேறேதாச்சுமிருந்தா சீக்கிரமா சொல்லிபோடுங்.... புண்ணியமாப் போவுட்டும்....

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

//கதிர்//

தென்னங் கதிர் பண்டறது.....

உங்கு மாப்பு இந்த வெசயத்துல வாத்தியாராவுல்ல இருக்காரு....

vasu balaji said...

/குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...

இதில்....நீங்கள்......எந்த வகை......
என்...பது.....உங்களுக்கே தெரியும்./

அட நம்மளுக்குள்ள சொல்லி திருத்திக்கிட்டா வாத்தி சிரிச்சிகிட்டே போய்டுவாரல்லோ. அதான்.
/மாப்புவ பார்த்துதான்
பயப்படுவீங்களாட்ட இருக்கு/

ஏசி மிசினுக்கு குளுருதான்னு குட்டு விழுந்தத மறைச்சு போட்டு கதிருக்கு அலம்பல பாரு.:))

ஆரூரன் விசுவநாதன் said...

//அட நம்மளுக்குள்ள சொல்லி திருத்திக்கிட்டா வாத்தி சிரிச்சிகிட்டே போய்டுவாரல்லோ. அதான்.//

ஹி....ஹி....ச்சும்மா.....டமாஸுங்.....ணா.

அத்தயேங்கேக்கறீங்....ணா. இவரு அலம்பல் தாங்க முடியலீங்....ணா.

ஈரோடு கதிர் said...

//ஏசி மிசினுக்கு குளுருதான்னு குட்டு விழுந்தத மறைச்சு போட்டு கதிருக்கு அலம்பல பாரு.:))//

எனக்கு வேத்துப் போனதெங்கே உங்களுக்குப் போய் தெரியப் போவுது

பழமைபேசி said...

நன்று! நன்று!!

பழமைபேசி said...

அந்த பயமிருந்தாச் சரி! இஃகிஃகி!!

ஆரூரன் விசுவநாதன் said...

பிச்சருக்கு வராமயே......
படங்....காட்டராரய்யா....


இன்னும் பிச்சருக்கு வந்தா என்னென்ன செய்வாரோ....

தா.............ங்க முடியலட...சாமீ.....


நன்றி

க.பாலாசி said...

//இப்படிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்னதான் செய்வாய் நீ.....//

ஆறடி நிலமும்....அரைப்படி அரிசியும்....எல்லாம் முடிந்தபின்னே...

//பாசம்நிறை நண்பரெல்லாம்
வாசமிகு வலைப்பூவில்
வரிசையாய் கேட்டுவிட்டார்....
அவர்- ஆசைப்பட்ட அத்தனையும்
அப்படியே தந்துவிடு......அப்படியே தந்துவிடு.//

இது நியாயம்....

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க பாலாஜி......

என்னாச்சு.....உங்கூட்டுக்கும் வந்தாளே.....தேவதை....

கேட்டுட்டீங்களா......

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு விஸ்வா.வாழ்த்தும் நன்றியும்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாருங்கள் நண்பர்.பா.ரா.

உண்மையை சொல்கிறேன்.....கடந்த ஒரு வாரமாக எழுதுவதற்கு மனமில்லை. உங்கள் அழைப்பையும் மறுதலிக்க விரும்பவில்லை...எனவே...இப்படி ஒப்பேற்றி விட்டேன். அவ்வளவே.

உங்கள் அன்பிற்கு நன்றி

அன்புடன்
ஆரூரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

nallaayirukku

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பர் டி.வி.ஆர்

அன்புடன்
ஆரூரன்

கலகலப்ரியா said...

//யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்//

அஜித் மாமா மாதிரியே பாடுறீங்களே.. நல்லாத்தான் கேக்கறீங்க வரம்..

//
அவர்- ஆசைப்பட்ட அத்தனையும்
அப்படியே தந்துவிடு......அப்படியே தந்துவிடு.//

கொடுத்துடும்மா தாயே..

ஆரூரன் விசுவநாதன் said...

கலகலப்ரியா.....

இதே சாக்குல 'தல'ய மாமான்னுடீங்களே ப்ரியா....

வீட்டுக்கு ஆட்டோ அனுப்பறன் இருங்க......


//கொடுத்துடும்மா தாயே..//



அப்படியே தரலைன்னாலும் பரவால்ல.....கொஞ்சம் முன்ன பின்ன குடுக்கச் சொல்லி.....கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க........

நன்றி