Sunday, September 27, 2009

ஹலோ........எங்களத் தெரியுதா?

"சொல்லின் செல்வர் சம்பத்"




E.V.K.சம்பத் அவர்தம் துணைவியார் திருமதி சுலோச்சனா சம்பத் தந்தை பெரியாருடன்


 நாமக்கல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக அவைத்தலைவர் திருமதி.சுலோச்சனா சம்பத்  கணவரும், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தந்தையும், தந்தை பெரியாரின் சகோதரர்  ஈ.வெ.கிருட்டிணசாமியின் மகனுமான  திரு.E.V.K சம்பத்.

திமுக வின் பிரச்சார பீரங்கி என பெயர் பெற்றவர்.  "சொல்லின் செல்வர் சம்பத்" என்று புகழப் பெற்றவர்.  இவரின் பாராளுமன்ற பேச்சுக்கள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமானவை.  முன்னாள் பிரதமர் இந்திராவின் கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளாராக இருந்தவர்.

தமிழர்கள் நலனும், தமிழ் மொழியும் காப்பாற்றப்படும் என்று, பிரதமர் நேரு எழுத்துப்பூர்வ உறுதியளித்தது கடிதம் எழுதியிருந்தது   இவரின் பெருமைக்கு சாட்சியம்.











ஈரோட்டில் அவரது சிலை...........சிவப்பு மையில் வட்டமிடப்பட்டுள்ளது.

                          --------------------------------------------------
அறிஞர் அண்ணா


.முத்தமிழறிஞர். வாழும் வள்ளுவர்,டாக்டர். கலைஞருக்கு காஞ்சியில் நேற்று விழா எடுக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.  அந்த விழா மேடையின் பின்புறத்தின்  இவர் படம் வைக்கப்பட்டிருந்ததை பார்த்திருப்பீர்கள். பார்க்கதவர்களுக்கு சிறப்புப் படம்.



அறிஞர் அண்ணா உருவம் சிவப்பு மையால் வட்டமிடப்பட்டுள்ளது.


வாழ்க திராவிடம்....வாழ்க பெரியாரியம்......
வாழ்க  முட்டாள் தொண்டர்கள்..
வாழ்க  அப்பாவி மடையர்கள்...ச்சீ....அப்பாவி மக்கள்







8 comments :

vasu balaji said...

:)). அவுங்கவுங்க பிறந்த நாளன்னைக்கு நினைவு கூறுதலே பெரிய விஷயம். இவங்கள பத்தியே சொல்லிட்டிருந்தா இருக்கிறவங்கள பத்தி யாரு பேசுவா. தம்பட்டம் தானுங்களே ப்ரதானம்.

ஆரூரன் விசுவநாதன் said...

வானப்பாடிகள்//

சரிதான் நீங்க சொல்லறது.

ஈரோடு கதிர் said...

ஓ... ஜி.எச் பக்கத்தில இருக்கிற சிலை சம்பத் அவர்களோட சிலையா?

கேமாராவ வச்சிட்டு கம்னு இருக்க மாட்டீங்கறீங்க போங்க

ஆரூரன் விசுவநாதன் said...

பார்த்தீங்களா....... உங்களுக்கே தெரியல்லைல...

நன்றி
கதிர்

க.பாலாசி said...

ஆமா எங்கையோ சிகப்பு மையால குறிப்பிட்டுருக்குன்னு சொன்னீங்க அந்த போட்டோவ மட்டும் கடைசிவரையில் காட்டல...

அதான் எல்லாத்துக்கும் முன்னாடியே இன்றைய (தரு)தலைகளின் போட்டோ நிக்குதே...

என்ன கொடுமை சார் இது....

ஆரூரன் விசுவநாதன் said...

அத தான் நான் தேடிகிட்டு இருக்கறன் பாலாஜி

Ashok D said...

ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி அசோக்....