Sunday, September 13, 2009

ஈரோட்டில் பாரதி............

பாரதியின் கடைசிக்கூட்டம் பற்றி ஐயா, கணேசனின் அவர்களின் பதிவைப் படித்ததும், நான் சிறு வயதில் பார்த்த  அந்த படிப்பகம் நினைவிற்கு வந்தது.
இன்று சென்றிருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

பள்ளிக்குசெல்லும் போது ஒரு பழைய இடிந்த கட்டிடத்தை பார்த்திருக்கிறேன். பாரதி ஈரோடு வந்த போது இங்கு கூட்டம் நடந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் பள்ளியிலே படித்த காலத்தில் இடிந்து, சிதிலமடைந்திருந்த கட்டிடத்தை, புதுப்பித்து, நல்ல நினைவிடமாக மாற்றிய முன்னாள் மாவட்ட ஆட்சியர். முனைவர். உதயச்சந்திரன். அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.


http://nganesan.blogspot.com/2009/09/bharati-last-speech.html


 
  

15 comments :

மாதவராஜ் said...

நல்ல காரியம் செய்திருக்கிறார் உதயச்சந்திரன் அவர்கள். இவரைப்போன்ற இலக்கிய ஆர்வமும், சமூகப் பொறுப்பும் உள்ள அதிகாரிகள் மக்கள் மனதில் இடம்பெற்று விடுகிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

ஏங்க சொல்லாம போய்டீங்க...

பகிர்வுக்கு நன்றி

//மாதவராஜ் said...
நல்ல காரியம் செய்திருக்கிறார் உதயச்சந்திரன்//

அவர் இருந்த காலம் பொற்காலம்

ஆரூரன் விசுவநாதன் said...

அதற்கென்ன கதிர், இன்னொருமுறை செல்லலாம்.
வேரு ஒருவேளையாக அங்கு செல்லவேண்டி இருந்தது, எனவே உங்களை அழைக்க முடியவில்லை, மேலும், எல்லா ஞாயிறுக்கிழமையிலும் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

ஆரூரன் விசுவநாதன் said...

சகோதரர்.திரு. மாதவராஜ்.
நன்றி

//மாதவராஜ் said...
நல்ல காரியம் செய்திருக்கிறார் உதயச்சந்திரன்//

ஈரோடு நகருக்கு நிறைய செய்திருக்கிறார்.

அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
ஏங்க சொல்லாம போய்டீங்க...//

அதான் இடுகை போட்டு சொல்றாரே! பகிர்தலுக்கு நன்றிங்க!!

நா. கணேசன் said...

ஆரூரன்,

புகைப்படங்களுக்கு நன்றி! கொங்குநாட்டிற்கு உரிய தூய்மையுடன் இன்றும் கருங்கல்பாளைய வாசகசாலை இருக்கிறது அறிய மகிழ்ச்சி.

சுவாமி சித்பவானந்தர் பூர்வாசிரமத்தில் எங்கள் நெருங்கிய உறவினர். பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் தங்கிப் பரமஹம்சரின் சீடர்களிடம் சன்னியாசம் பெற்ற மகான். பல கல்வி நிலையங்களை உருவாக்கியவர். அவர் முதன்முதலாகக் குமரிமுனையில் விவேகானந்தர், வள்ளுவர் நினைவுச் சின்னங்கள் ஏற்படவேண்டும் என்று விரும்பிப் பேசி எழுதியவர்.

நா. கணேசன்

ஆரூரன் விசுவநாதன் said...

திரு. கணேசன் அய்யா,

//சுவாமி சித்பவானந்தர் பூர்வாசிரமத்தில் எங்கள் நெருங்கிய உறவினர். பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் தங்கிப் பரமஹம்சரின் சீடர்களிடம் சன்னியாசம் பெற்ற மகான். பல கல்வி நிலையங்களை உருவாக்கியவர். அவர் முதன்முதலாகக் குமரிமுனையில் விவேகானந்தர், வள்ளுவர் நினைவுச் சின்னங்கள் ஏற்படவேண்டும் என்று விரும்பிப் பேசி எழுதியவர்.//

அறியப்படாத செய்தி. பகிர்விற்கும் வருகைக்கும்
நன்றி.

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமை பேசி//

//அதான் இடுகை போட்டு சொல்றாரே! //


இதான வேணாங்கறது.

ஏதோ கூப்புடும் போது கூட வந்துகிட்டிருக்கறார்,
கெடுத்துபோடாதீங்கப்பு....

நன்றி
அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
//பழமை பேசி//

//அதான் இடுகை போட்டு சொல்றாரே! //


இதான வேணாங்கறது.

ஏதோ கூப்புடும் போது கூட வந்துகிட்டிருக்கறார்,
கெடுத்துபோடாதீங்கப்பு....//

அவ்வ்வ்வ்வ்........

க.பாலாசி said...

நல்ல தகவல் பகிர்வு அன்பரே...அடுத்த முறை இதை போன்ற இடங்களுக்கு செல்லும்போது எங்களுக்கும் சொல்லவும்....

படங்களை பார்க்கும்போது அந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது...

கலகலப்ரியா said...

முதல் தடவையாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்..! கவிதைகள் அருமை..!

ஆரூரன் விசுவநாதன் said...

//பாலாஜி//

நீங்க மட்டும் பாண்டிச்சேரி என்ன விட்டுட்டு போனீங்கள்ள.. ....அதான்.....

ஹி....ஹி....

அருகில்தான் இருக்கிறது எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்.


அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//கலகலப் பிரியா//


வாருங்கள் கலகலப்பிரியா...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி
அன்புடன்
ஆரூரன்

vasu balaji said...

நல்ல தகவல். பகிர்தலுக்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி வானம்பாடிகள்