பத்தடிக்கு
பத்தடியில்
பட்டுமெத்தை
நாமளித்து
பாலும்
தேனும் கொடுத்தாலும்-தோழா
நம் குழந்தை,
இழந்ததினி மீளா
கருக்கலிலே முழுச்சதுமே
கம்மாக்கரை
தேட வச்சா அம்மாயி…
விளக்கெண்ணை
வைத்தியந்தான் அப்போது-இந்த
விவரஞ்சொல்ல
ஆ ளேது இப்போது.
தண்ணிக்குள்ள மூச்சடக்கி
தவளையாட்டம்
ஆடிபுட்டு
கஞ்சி
குடிச்சு, நடந்ததொரு காலம்-இப்ப
காரு
வண்டி, கார்ன் பிளக்ஸ்,… நாம எங்க போறம்?
சுட்டுத்தின்ன பனம்பழமும்,
சோளச்சோறும்,கம்மங்கூலும்
காட்சிப்
பொரு ளாகத்தானே ஆச்சு-சொம்புத்
தண்ணி
வெல கேக்க சாவு விழுந்தாச்சு.
ஊரெங்கும் ஓடியாடி,
காடுமேடு
யாவும் சுத்தி
ஊரடங்க
நாமுறங்கப் போனோம்-இப்ப
வூட்ட
தாண்டி போக யெடங் காணோம்.
ஆத்தா போட்ட சோத்தில
அப்புச்சி
சொன்ன கதையில
படுத்ததுமே
உறங்கிப்போனோம் திண்ணையில-அடுத்த
தலைமுறையே
உருளுதிங்க தண்ணியில.
சோளக்காடு,ஆலமரம், கேணி
கரும்புக்காடு,
கடல காடு, ஏரி
அத்தனையும்
ஆக்கிப்புட்டான் ப்ளாட்டா-இப்ப
அடுக்குமாடி
திட்டம் வேற, லேட்டா…..
13 comments :
இப்புடியெல்லாம் ஏங்க விடாதீங்க ஐயா. அருமை.
நானும் ஈரோடு தாங்க ... :) இந்த கவிதையோட உணர்வை என்னால தெளிவா உணர முடிதுங்ண்ணா ..பின்னீட்டீங்க போங்க ..
அப்படியே வந்து என்னோட பதிவைப் பார்த்துட்டு போங்க - semmozhi.wordpress.com..
ம்ம்ம்...ஏன்தான் காலங்களும் கண்டுபிடிப்புக்களும்
இயற்கையை மாத்திச்சுன்னு இருக்கு.
அருமையாய் இருக்கங்க விஸ்வா!ஏக்கமாத்தான் இருக்கு,மக்களே..
நன்றி ராதாகிருஷ்ணன்.
அன்புடன்
ஆரூரன்
//வானம்பாடிகள்//
நாமக்குத்தான் எல்லாம் கெடச்சுதே....அடுத்த தலைமுறைதான் ஏங்க வேண்டும்.
அன்பிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்
//பா.ராஜாராம்//
சகோதரா,உங்கள் வருகையும் பகிர்வும் மிகுந்த மகிழ்ச்சியைக் தருகிறது.
அன்பிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்
//செம்மொழி//
அன்பிற்கு நன்றி செம்மொழி
அன்புடன்
ஆரூரன்
//ஹேமா//
பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், என் இனத்தின் தனிப்பட்ட குணங்களையும், அதன் மாண்பையும் இழந்து கொண்டிருக்கிறேன்.இது தொடருமானால் நானும் இந்த தாய் தி(தெ)ரு நாட்டில், மதியிழந்து,மானமிழந்து, அகதியாகிவிடுவேனோ, என்ற பயத்தில் எழுதுகிறேன், தோழி
அன்பிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்
//சுட்டுத்தின்ன பனம்பழமும்,
சோளச்சோறும்,கம்மங்கூலும்
காட்சிப் பொரு ளாகத்தானே ஆச்சு-சொம்புத்
தண்ணி வெல கேக்க சாவு விழுந்தாச்சு.//
பாக்கெட்டுத் தண்ணிக்குத்தான் பவுசுங்க
//ஆத்தா போட்ட சோத்தில
அப்புச்சி சொன்ன கதையில
படுத்ததுமே உறங்கிப்போனோம் திண்ணையில-அடுத்த
தலைமுறையே உருளுதிங்க தண்ணியில.//
திண்ணையோட குளிர்ச்சி
ஏசி-யில கூட இல்லீங்க
எல்லாம் தொலைத்துவிட்டுத்தான் நிற்கிறோம்
வலிமிகு பதிவுங்க
கதிர்.
//எல்லாம் தொலைத்துவிட்டுத்தான் நிற்கிறோம்//
உண்மைதான் கதிர்
அன்புடன்
ஆரூரன்
நல்லா இருக்கு வரிகள்...சிலசமயத்தில் வலிகளாயும்!
//சந்தன முல்லை//
..சிலசமயத்தில் வலிகளாயும்!
நன்றி
அன்புடன்
ஆரூரன்
Post a Comment