Wednesday, September 16, 2009

நம் குழந்தை இழந்ததினி மீளா


பத்தடிக்கு பத்தடியில்
பட்டுமெத்தை நாமளித்து
பாலும் தேனும் கொடுத்தாலும்-தோழா
நம் குழந்தை,  இழந்ததினி மீளா

கருக்கலிலே முழுச்சதுமே
கம்மாக்கரை தேட  வச்சா அம்மாயி
விளக்கெண்ணை வைத்தியந்தான் அப்போது-இந்த
விவரஞ்சொல்ல ஆ ளேது  இப்போது.

தண்ணிக்குள்ள மூச்சடக்கி
தவளையாட்டம் ஆடிபுட்டு
கஞ்சி குடிச்சு, நடந்ததொரு காலம்-இப்ப
காரு வண்டி, கார்ன் பிளக்ஸ், நாம எங்க போறம்?

சுட்டுத்தின்ன பனம்பழமும்,
சோளச்சோறும்,கம்மங்கூலும்
காட்சிப் பொரு  ளாகத்தானே ஆச்சு-சொம்புத்
தண்ணி வெல கேக்க சாவு விழுந்தாச்சு.

ஊரெங்கும் ஓடியாடி,
காடுமேடு யாவும் சுத்தி
ஊரடங்க நாமுறங்கப் போனோம்-இப்ப
வூட்ட தாண்டி போக யெடங் காணோம்.

ஆத்தா போட்ட சோத்தில
அப்புச்சி சொன்ன கதையில
படுத்ததுமே உறங்கிப்போனோம் திண்ணையில-அடுத்த
தலைமுறையே உருளுதிங்க  தண்ணியில.

சோளக்காடு,ஆலமரம், கேணி
கரும்புக்காடு, கடல காடு, ஏரி
அத்தனையும் ஆக்கிப்புட்டான் ப்ளாட்டா-இப்ப
அடுக்குமாடி திட்டம் வேற,     லேட்டா..


13 comments :

vasu balaji said...

இப்புடியெல்லாம் ஏங்க விடாதீங்க ஐயா. அருமை.

Anonymous said...

நானும் ஈரோடு தாங்க ... :) இந்த கவிதையோட உணர்வை என்னால தெளிவா உணர முடிதுங்ண்ணா ..பின்னீட்டீங்க போங்க ..

அப்படியே வந்து என்னோட பதிவைப் பார்த்துட்டு போங்க - semmozhi.wordpress.com..

ஹேமா said...

ம்ம்ம்...ஏன்தான் காலங்களும் கண்டுபிடிப்புக்களும்
இயற்கையை மாத்திச்சுன்னு இருக்கு.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கங்க விஸ்வா!ஏக்கமாத்தான் இருக்கு,மக்களே..

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

நாமக்குத்தான் எல்லாம் கெடச்சுதே....அடுத்த தலைமுறைதான் ஏங்க வேண்டும்.

அன்பிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//பா.ராஜாராம்//

சகோதரா,உங்கள் வருகையும் பகிர்வும் மிகுந்த மகிழ்ச்சியைக் தருகிறது.

அன்பிற்கு நன்றி

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//செம்மொழி//

அன்பிற்கு நன்றி செம்மொழி

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹேமா//

பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், என் இனத்தின் தனிப்பட்ட குணங்களையும், அதன் மாண்பையும் இழந்து கொண்டிருக்கிறேன்.இது தொடருமானால் நானும் இந்த தாய் தி(தெ)ரு நாட்டில், மதியிழந்து,மானமிழந்து, அகதியாகிவிடுவேனோ, என்ற பயத்தில் எழுதுகிறேன், தோழி

அன்பிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்

ஈரோடு கதிர் said...

//சுட்டுத்தின்ன பனம்பழமும்,
சோளச்சோறும்,கம்மங்கூலும்
காட்சிப் பொரு ளாகத்தானே ஆச்சு-சொம்புத்
தண்ணி வெல கேக்க சாவு விழுந்தாச்சு.//

பாக்கெட்டுத் தண்ணிக்குத்தான் பவுசுங்க

//ஆத்தா போட்ட சோத்தில
அப்புச்சி சொன்ன கதையில
படுத்ததுமே உறங்கிப்போனோம் திண்ணையில-அடுத்த
தலைமுறையே உருளுதிங்க தண்ணியில.//

திண்ணையோட குளிர்ச்சி
ஏசி-யில கூட இல்லீங்க

எல்லாம் தொலைத்துவிட்டுத்தான் நிற்கிறோம்

வலிமிகு பதிவுங்க

ஆரூரன் விசுவநாதன் said...

கதிர்.


//எல்லாம் தொலைத்துவிட்டுத்தான் நிற்கிறோம்//

உண்மைதான் கதிர்

அன்புடன்
ஆரூரன்

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு வரிகள்...சிலசமயத்தில் வலிகளாயும்!

ஆரூரன் விசுவநாதன் said...

//சந்தன முல்லை//

..சிலசமயத்தில் வலிகளாயும்!

நன்றி
அன்புடன்
ஆரூரன்