Tuesday, September 29, 2009

காமத்துப் பால்......



சூரிய வெளிச்சம் அறை முழுதும் பரவத்தொடங்கியது.  படுக்கையறையை விட்டு மெல்ல வெளியே வந்து,  நீண்ட அணைப்பின் சுகத்திலிருந்து மீள மறுக்கின்ற இமைகளை கைகளால் அழுத்தித் தேய்த்து, பிரிக்கின்ற முயற்சியில், பால்கனியின் நடுவில் நான்.........

காலைக் கருக்கெழுந்து
கருஞ்சாந்து பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார் கூந்தல் பின்னலிட்டு
காத்திருந்தேன் உம் வரவை….காத்திருந்தேன் உம் வரவைஎன்பதைப்போல்,

கைகள் வாசலில் கோலமிட, விழிகள் என் மீது கோலமிட, மெலிதாய் எனைப்பார்த்துச் சிரித்தாள், எதிர்வீட்டுச் சித்ரா

இயல்பாய் சிரித்துத் திரும்ப…………..

தொன்னூரைத் தொடவிருக்கும் எடையையும்(கி.கி), ஐம்பதைத் தொடவிருக்கும் இடையையும்(இன்ச்), நாற்பதைத்தொடவிருக்கும் (வயதையும்) குறைக்க, கஜினி முகமதாய், முயற்சி செய்யும் பக்கத்து வீட்டுமாமி.வனிதா 

வாக்கிங் முடித்துத் திரும்பும் வழியில், வாய் முழுதும் பற்களாய்,  , “குட்மார்னிங்” சொல்ல, பதிலுக்கு நானும் சொல்லி முடிக்கையில்…………….


கல்லூரிப் படிப்பை முடித்து, 
வாழ்க்கையை படிக்கபோகும் ஆர்வத்தோடு, 
புத்தம்புது மலராய் பூத்துக் குலுங்கும் அழகோடு, 
கண்களைச் சுறுக்கிக் கெஞ்சும் விழிகளோடு, 
இதழ்கள் விரிய , தெற்றுப்பல் சிரிப்போடும் 
நான் வாங்கும் காலைப்பத்திரிக்கையோடும்,..........

கீழ் வீட்டுப்பெண்……வித்யா……..ஹாய்.ஜஸ்ட் அ மினிட்.(ஹும்.........குடுத்து வச்ச பேப்பர்) 



 இட்ஸ் ஒகேகோஅஹெட்என்று சிரித்துக் கொண்டே, இயல்பாய் திரும்புகையில்……


இறுக்கத்தோடு……இனியா……….என் இல்லாள், இனியாள்,..
(சரீடி..நிறுத்து..இனி நீ தனியாள் தாண்டிஉண்டு இன்னைக்கு உனக்கு..உள்ளே ஏதோ ஒரு பட்சி சொன்னது)


காலங்காத்தால………………… என்ன?...... ம்ம்ம்......எல்லாத்துக்கும் தர்ம தரிசனம் குடுத்தாச்சா?...........ஊர்ல இருக்கிறவளுகலெல்லாம் பார்க்கறதுக்கா நா.கட்டிகிட்டு வந்தேன்.. .எவளப்பார்த்தாலும் இதே தொல்ல…….

பொறுக்கி……பொறுக்கி.ராத்திரிக்கு கொணச்சுகிட்டு வந்தே……? பார்த்துக்கோ……

இனி நீ வேற பெட்…… நான் வேற பெட்………எவளெவளயெல்லாம் பார்த்து கிட்டிருந்தயோ..அவளயெல்லாம் கூப்டுக்கோ……….


அடக் கடவுளே………ஒரு..இல்ல.இல்ல………மூணு சின்ன சிரிப்புக்கு,  இத்தா பெரிய  தண்டனையா?..... ஒருத்தர் சிரிக்க..பதிலுக்கு நாம் சிரிக்க……..இத யாருகிட்டப் போய் சொல்லுவேன்..? என்னன்னு சொல்லுவேன்.........?



ஹலோ ஒரு நிமிஷம்..வெயிட்....வெயிட்.......இது என்னோட அனுபவமோ?  புலம்பலோ  இல்லைங்க……


திருவள்ளுவரோடதுஅதாங்க.தாடி வச்சு கையில ஏடெல்லாம் வச்சிருப்பாரே…….அதாங்க…….. இன்னும் புரியலையா?   திருக்குறள் எழுதினாரே அவருது தாங்க……..


 பெண் இயலார் எல்லோரும் கண்ணின் பொது உண்பர்
 நண்ணேன் பரத்த நின் மார்பு-திருக்குறள். அ:132:1311


டிஸ்கி

இதில் தவறேதுமிருந்தால் அது திருவள்ளுவருடையது....அல்லது. உரை எழுதிய  மு.வ. வுடையது.
திரைக்கதை...மட்டும் என்னுது.......


ஒழுங்கா ஓட்டுப் போட்டுட்டு......பின்னூட்டமும் எழுதீருங்க....


 இல்ல ........தினம் ஒரு குறள் ரேஞ்சுக்கு ஒரு ட்ரை......... பண்ணி கொன்னுடுவேன்.........


30 comments :

Anonymous said...

//ஒழுங்கா ஓட்டுப் போட்டுட்டு......பின்னூட்டமும் எழுதீருங்க.... //

:)
ஸ்மைலி போட்டுக்கறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி....சின்ன அம்மி்ணி.....

ஈரோடு கதிர் said...

அய்யன் திருவள்ளுவரே என்னை மன்னியும்

//ரேன்ச்க்கு//
இதுக்கு இருக்கு ஆப்பு

ஆரூரன் விசுவநாதன் said...

மாத்தீட்டம்ல்ல......மாத்தீட்டம்ல்ல.....

ஆரூரன் விசுவநாதன் said...

//அய்யன் திருவள்ளுவரே என்னை மன்னியும்//

ஆமென்.....

ஹேமா said...

இவ்வளவு சொன்ன திருவள்ளுவரே இப்பிடின்னா...?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

க.பாலாசி said...

//தொன்னூரைத் தொடவிருக்கும் எடையையையும்(கி.கி), ஐம்பதைத் தொடவிருக்கும் இடையையும்(இன்ச்), நாற்பதைத்தொடவிருக்கும் (வயதையும்) குறைக்க, கஜினி முகமதாய், முயற்சி செய்யும் பக்கத்து வீட்டுமாமி….வனிதா…//

ம்ம்...இதெல்லாமா திருக்குறள்ல வருது...நான் படிக்கிறப்ப இல்லையே.


//இனி நீ வேற பெட்…… நான் வேற பெட்………எவளெவளயெல்லாம் பார்த்து கிட்டிருந்தயோ…..அவளயெல்லாம் கூப்டுக்கோ………. //

அடக் கொடுமையே...

//திருவள்ளுவரோடது…அதாங்க….தாடி வச்சு… கையில ஏடெல்லாம் வச்சிருப்பாரே…….அதாங்க……..… இன்னும் புரியலையா? திருக்குறள் எழுதினாரே அவருது தாங்க……..//

அதானாலதான் திருவள்ளுவர கன்னியாக்குமரியில தனியா நிக்க வைச்சிட்டாங்களா?

மணிஜி said...

/கல்லூரிப் படிப்பை முடித்து,
வாழ்க்கையை படிக்கபோகும் அவசரத்தோடு,//

ஆர்வத்தோடு என்று இருந்தால்??
நல்லாயிருக்கு விசு

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் பதிவு.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிநண்பர் தண்டோரா.....

மாற்றிவிடுவோம்....

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி.....

மெயின் கத வள்ளுவரு.....திரைக்கதை தான நாம....

இது கூட இல்லைனா எப்படி பாலாஜி...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி டி.வி.ஆர்

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹேமா//



//இவ்வளவு சொன்ன திருவள்ளுவரே இப்பிடின்னா...?//

இத அவுருகிட்டத்தான் கேக்கோணுங்.....எனக்கொன்னும் தெரியாதுங்ம்ணி.....

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க!


//படுக்கையறயை //

படுக்கையறையை

//எடையையையும்//

எடையையும்

//இருக்கிறவளுகளெள்ளாம் //

இருக்கிறவளுகளெல்லாம்

பழமைபேசி said...



ஓடியோடிப் புல்லுப் புடுங்குறதுல
காடு சுத்தமான மாதரயும் ஆச்சுது;
எருமைக்குப் புல்லும் ஆச்சுது!

தேடித் தேடி பிழை திருத்துறதுல
பிழை திருத்துன மாதரயும் ஆச்சுது;
படிச்சிட்டு போடுறான்னும் ஆச்சுது!

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி மட்டும் தான் செய்ய முடியுமா...என் பங்குக்கு...

//
தொன்னூரைத் தொடவிருக்கும் எடையையையும்
//

அது தொன்னூறு இல்ல??

:))

Unknown said...

//.. பழமைபேசி said...
ஓடியோடிப் புல்லுப் புடுங்குறதுல
காடு சுத்தமான மாதரயும் ஆச்சுது;
எருமைக்குப் புல்லும் ஆச்சுது! ..//

என்ன அருமையா ஒரு தத்துவம் சொல்லிப்போட்டிங்க போங்க..

ஈரோடு தங்க விசுவநாதன் said...

//பழமைபேசி//

அப்பவே கதிரு சொன்னாரு, இருங்க இருங்க மாப்பு வரட்டும், உங்களுக்கிருகுது ஆப்புன்னு.....
அவ்வ்வ்வ்..................

ஆரூரன் விசுவநாதன் said...

ஓடியோடிப் புல்லுப் புடுங்குறதுல
காடு சுத்தமான மாதரயும் ஆச்சுது;
எருமைக்குப் புல்லும் ஆச்சுது






//ஆடு மேச்சாமதரயும் ஆச்சு,அண்ணனுக்கு பொண்ணுப் பாத்தாமதரயும் ஆச்சு// ன்னு நம்மபக்கம் சொல்லுவாங்க.....அதுமாதரயா?

ஆரூரன் விசுவநாதன் said...

//பட்டிக்காட்டான்//

வாங்க பட்டிக்காட்டான்.

//அதுசரி//
வாங்க......... அதுசரி....எத்தன பேர் கிளம்பிருக்கிங்க....இப்படி...

நன்றி

vasu balaji said...

/இனி நீ வேற பெட்…… நான் வேற பெட்/

திண்ணையில படுக்கவுட்டாங்கன்னும் சொல்லலாம். அண்ணன் சொன்னா மாதிரியும் சொல்லலாம்.

/இமைகளை கைகளால் அழுத்தித் தேய்த்து, பிரிக்கின்ற முயற்சியில், பால்கனியின் நடுவில் நான்........./

அரைத்தூக்கத்துலயே இவ்வளவு லுக்கு.

/ஹலோ ஒரு நிமிஷம்…..வெயிட்....வெயிட்.......இது என்னோட அனுபவமோ? புலம்பலோ இல்லைங்க……/

திருவள்ளுவர் பேப்பர் வாங்க போனாராமா. வாசுகி வஞ்சதாமா. நம்பீட்டம்ல.

பரிமேலழகர் உரைய படிச்சா மாரு அகலமா இருந்தா போதாது போல. முதுகு அப்புடி இருக்கணுமாட்ருக்கு. துபாய்ல வாங்கின திருக்குறளாட்ருக்கு. கடோசில இருந்து முதல்ல பைண்ட் பண்ணிட்டாங்களோ?

S.A. நவாஸுதீன் said...

நீண்ட அணைப்பின் சுகத்திலிருந்து மீள மறுக்கின்ற இமைகளை - சூப்பர் நண்பா! க்ளாஸ்
*****
தொன்னூரைத் தொடவிருக்கும் எடையையும்(கி.கி), ஐம்பதைத் தொடவிருக்கும் இடையையும்(இன்ச்), நாற்பதைத்தொடவிருக்கும் (வயதையும்) குறைக்க, கஜினி முகமதாய், முயற்சி செய்யும் பக்கத்து வீட்டுமாமி….வனிதா… -
*****
குசும்புன்னாலும் அழகா ரசிக்கும்படி எழுதி இருக்கீங்க நண்பா

ஈரோடு தங்க விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

இல்லைங்ண்ணா,,,,,எல்லாம் உள்ளூர் சரக்குதானுங்...அதென்னமோ, கொறள பிரிச்சோன்னையும் நமக்கு இதுதான் வந்ததுபாருங்க...

செரின்னு எழுதிபுட்டனங்.....

//அரைத்தூக்கத்துலயே இவ்வளவு லுக்கு.//
நம்மளது எப்பவுமே ராச பார்வ தானுங்.....

நன்றிங்ணா....

ஆரூரன் விசுவநாதன் said...

நவாஸ்தீன்.....


நன்றி நண்பா....

நசரேயன் said...

ஓட்டு & பின்னூட்டம் போட்டாச்சி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நாசரேயன்.....


வுலுவர வோட்டயும் வார பின்னூட்டத்தையும் பார்த்தா, தொடர்ந்து எழுதச் சொல்லுரீங்களா? நிறுத்தச் சொல்லுறீங்களா?.....என்ன மக்கா....கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க மக்கா...

vasu balaji said...

ஓவர் சீனு உடம்புக்கு ஆவாது சாமியோவ். எழுதியாவணும்னு போராட்டம் பண்ண வச்சிறாதீங்க.

vasu balaji said...

/வுலுவர//சொல்லுரீங்களா?/

வாத்தியாரு வந்து போய்ட்டாரு. இனிமே என்ன தப்பு வேணுமானாலும் பண்ணலாம்னு ஏத்தம்.ம்ம்ம். :)). வரதுகுள்ள திருத்திப் போடுங்க